கனடாவில் பயங்கரவாத தாக்குதல்: பொலிஸ் அதிகாரிக்கு கத்தி குத்து, பலர் காயம்

Report Print Arbin Arbin in கனடா
0Shares
0Shares
Cineulagam.com

கனடாவில் மர்ம நபர் ஒருவர் வாகனத்தில் வேகமாக வந்து பொலிஸ் சோதனைச் சாவடியில் மோதியதுடன் பொலிஸ் அதிகாரி ஒருவரை கத்தியால் தாக்கியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் காமன்வெல்த் அரங்கத்தின் வெளியே குறித்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் சிலர் காயமடைந்துள்ளதுடன் ஒரு பொலிஸ் அதிகாரி மீது பாய்ந்து அந்த நபர் கத்தியால் பயங்கரமாக தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதசாரி பொதுமக்கள் மீது அந்த நபர் வாகனத்துடன் வேகமாக வந்து மோதியதாகவும் கூறப்படுகிறது. கார் மோதிய வேகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் 15 அடி உயரத்தில் தூக்கி வீசப்பட்டதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வாகனத்தில் இருந்து குதித்த அந்த நபர் காயமடைந்த பொலிஸ் அதிகாரியை துரத்திச் சென்று கத்தியால் பல முறை தாக்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த வந்த பொலிசார் தாக்குதலில் ஈடுபட்ட நபரின் வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.

அதில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கொடி ஒன்று இருந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய பின்னர் தப்பிச் சென்ற நபரை பொலிசார் தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் Edmonton பகுதியில் அமைந்துள்ள காமன்வெல்த் அரங்கத்தின் வெளியே நடைபெற்றுள்ளது. அப்போது குறித்த அரங்கத்தில் விளையாட்டு ஒன்று நடந்துகோண்டிருந்ததாகவும் சுமார் 30,000 ரசிகர்கள் விளையாட்டை கண்டுகளித்துக் கொண்டிருந்ததாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்