கனடாவிற்குள் ஒரு மில்லியன் குடிவரவாளர்கள்

Report Print Mohana in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் குடிவரவாளர்கள் அடுத்த மூன்று வருடங்களில் கனடாவிற்குள் வர உள்ளனர். இவர்களில் பத்தாயிரக்கணக்கானவர்கள் ரொறொன்ரோவை வந்தடைவர் எனவும் கூறப்படுகின்றது. ஆனால் புது முகங்களின் ஒரு உட்புகுதலிற்கு நகரம் ஆயத்தமா?

குடியேற்றங்களை அதிகரிக்கும் இந்த மூலோபாயம் குறித்து ரொறொன்ரோ குடியேற்ற நிபுணர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரொறொன்ரோவில் வாழும் 55விகிதத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மை குடியிருப்பாளர்கள் வருடமொன்றிற்கு 30,000டொலர்களிற்கும் குறைந்த வருமானத்தில் வாழ்கின்றனரொன சமீபத்திய கணக்கெடுப்பு தரவு காட்டுகின்றதென கூறப்படுகின்றது.

2020ல் குடிவரவாளர்களின் எண்ணிக்கை 340,000ஆக உயர்வடையும்.

ரொறொன்ரோவில் அதிக மக்கள் என்றால் ஆதரவும் மேலதிகமாக தேவைப்படும் என ஸ்காபுரோ-ஏஜின்கோர்ட் 39-வது வட்டார பிரதிநிதி கவுன்சிலர் ஜிம் கரிஜியானிஸ் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளும் ஆயத்தமாக வேண்டும். வரும் பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலம் பேச முடியாதவர்களாக இருப்பர் எனவும் தெரிவித்தார்.

17சதவிகிதத்திற்கும் அதிகமான அண்மைக்கால குடிவரவாளர்களின் வசிவிடமாக ரொறொன்ரோ விளங்குகின்றது.

இப்போக்கு தொடருமாயின் 2018-ல் மட்டும் நகரம் 50,000ற்கும் மேற்பட்ட குடிவரவாளர்களை வரவேற்கும் எனவும் அடுத்த மூன்று வருடகால பகுதியில் கிட்டத்தட்ட 170,000ற்கும் மேலாக அதிகரிக்கும் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நகரம் தொடர்ந்து மலிவு வீட்டு வசதி குறித்து போராடுவதாகவும் அறியப்படுகின்றது.

பெரும்பாலான அண்மைக்கால சிரிய அகதிகள் ரொறொன்ரோ பெரும்பாகத்தின் வேறு இடங்களிலும் குடியேறுகின்றனர்.

பெரும்பாலானவர்கள் ரொறொன்ரோவை வந்தடைந்து ஸ்பொன்சர் செய்யப்பட்டனர் ஆனால் நகர எல்லைக்கப்பால் மிசிசாகா மற்றும் மார்க்கம் போன்ற இடங்களிற்கு-மிக மலிவான வீட்டு வசதிகள் கொண்ட பகுதிகளிற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்