டொராண்டோ நகரை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம்: குற்றவாளியை தேடும் பொலிஸ்

Report Print Arbin Arbin in கனடா
209Shares
209Shares
lankasrimarket.com

கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முதியவரை கத்தியால் கொடூரமாக தாக்கிவிட்டு தலைமறைவான நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோக்ஸ்வெல் மற்றும் மோர்டிமர் அவென்யூ அருகே செயல்பட்டுவரும் மைக்கேல் கர்ரன் மருத்துவமனையிலேயே குறித்த கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது.

இங்குள்ள அவசர சேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 62 வயது முதியவர் ஒருவரை கடந்த செவ்வாய் அன்று கத்தியால் கொடூரமாக தாக்கிவிட்டு இளைஞர் ஒருவர் மாயமாகியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் கத்திக்குத்தில் ஈடுபட்ட நபர் 31 வயதான Andy Metatawabin என கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்விரோதம் ஏதும் உள்ளனவா என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள பொலிசார் அந்த நபர் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்