செம்சுங் குழுமத் தலைவர் கைது

Report Print Thayalan Thayalan in நிறுவனம்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

தென்கொரியாவில் அரசியல் குழப்ப நிலையை ஏற்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில், பிரபல இலத்திரனியல் உற்பத்தி நிறுவனமான செம்சுங் குழுமத்தின் தலைவர் ஜே வை.லீ (48) கைது செய்யப்பட்டார்.

2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஜனாதிபதி பார்க் ஜியுன் ஹை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்காக முறையற்ற விதத்தில் செயற்பட்டதாக லீ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

advertisement

தென்கொரியாவின் பணக்காரக் குடும்பத்தின் வாரிசான லீ, செம்சுங் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை தலைவராவார். இவர் மீதான குற்றச்சாட்டுக்களையடுத்து இந்த விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்றிரவு அவரது இல்லத்தைச் சுற்றிலும் பொலிஸார் குவிக்கப்பட்டனர். அவரைக் கைது செய்யுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார்.

அவரை பத்து நாட்கள் விசாரிக்க அனுமதியளித்துள்ள அந்நாட்டு நீதிமன்றம், தேவையேற்படின் விசாரணை நீட்டிக்கவும் பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments