நிலமோசடி வழக்கு: நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Report Print Basu in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasri.com
advertisement

நிலப்பிரச்சனை தொடர்பாக நடிகர் வடிவேலு மற்றும் சிங்கமுத்து இடையே உடன்பாடு எட்டப்படாததால் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு தாம்பரம் இரும்புலியூர் அருகே நிலம் வாங்கியதில் நடிகர் சிங்கமுத்து, கங்கா உள்ளிட்ட 6 பேர், தம்மை ஏமாற்றியதாக நடிகர் வடிவேலு மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

advertisement

இதுதொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கா உள்ளிட்டோர் 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணையில் இரண்டு தரப்பினரும் சமரசம் செய்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நடிகர்கள் வடிவேல், சிங்கமுத்து ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அவர்கள் இருவரும் கடந்தமுறை நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அடுத்தமுறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும், தவறினால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.

இதனையடுத்து இன்று நீதிபதி முரளிதரன் அறையில் நடிகர் வடிவேலு மற்றும் சிங்கமுத்து ஆஜராகினர். அப்போது இரண்டு தரப்பினர் இடையே உடன்பாடு எட்டப்படாததால் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் கங்கா உள்ளிட்ட 5 பேர் தங்களை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments