பில்கேட்ஷின் கார் கலெக்ஷ்ன்கள் இதோ

Report Print Deepthi Deepthi in தொழிலதிபர்
0Shares
0Shares
lankasri.com

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கம்ப்யூட்டர் போன்றே கார்கள் மீதும் அதிக விருப்பம் கொண்டவர்.

பில்கேட்ஷின் கார் கலெக்ஷ்ன்கள் இதோ,

போர்ஷே 911 டர்போ

போர்ஷே 911 டர்போ மைக்ரோசாப்ட் நிறுவனம் துவங்கப்பட்டு சில ஆண்டுகளில் போர்ஷே 911 டர்போ காரை பில்கேட்ஸ் வாங்கினார்.

இந்த காரில் செல்வது அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக அவ்வப்போது குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த காரை 1990ம் ஆண்டு விற்பனை செய்துவிட்டார்.

டோரோதியம் என்ற ஏல நிறுவனம் பில்கேட்ஸ் பயன்படுத்திய 1979 ஆண்டு மொடல் போர்ஷே 911 டர்போ காரை ஏலத்தில் விற்பனை செய்தது. 80,000 டொலர் வரை ஏலம் போகும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்த கார் வெறும் 62,000 டொலருக்கு மட்டுமே விலை போனது.

இந்த காரில் 300 எச்பி பவரை அளிக்கும் 3.3 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது.

போர்ஷே 911 கரீரா

பில்கேட்ஸ் கராஜில் 1999 போர்ஷே 911 கரீரா கேப்ரியோலெட் கார் ஒன்றும் இடம்பிடித்தது. பல கார் பிரியர்களை கட்டிப்போட்ட இந்த உயர்வகை கார் மொடல் பில்கேட்ஸ் மனதையும் சுண்டி இழுத்துள்ளது.

போர்ஷேவிடமிருந்து வந்த மிகவும் பிரத்யேகமான கார் மொடல்களில் ஒன்று போர்ஷே 959.

ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு கார்களை இறக்குமதி செய்வது எளிதான விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், இந்த கார் சேகரிப்பாளர்களுக்கான மொடலாக குறிப்பிட்டு கிராஷ் டெஸ்ட்டுகளுக்கு உட்படுத்தவில்லை.

இதனால், இந்த காரை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் எழுந்தன.

ஃபோர்டு ஃபோகஸ்

விலையுயர்ந்த கார் மட்டுமின்றி, தனது சொந்த நாட்டு தயாரிப்பான ஃபோர்டு நிறுவனத்தின் ஃபோக்ஸ் கார் மொடலையும் பில்கேட்ஸ் வைத்திருந்தார்.

2008ம் ஆண்டு மொடல் ஃபோர்டு ஃபோகஸ் காரில் அவ்வப்போது செல்வதையும் வழக்கம். கடந்த 50 ஆண்டுகளில் சிறந்த 50 கார்களில் ஃபோர்டு ஃபோகஸ் கார் மாடலும் ஒன்று என இங்கிலாந்தை சேர்ந்த கார் என்ற ஆட்டோமொபைல் இதழ் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

போர்ஷே விரும்பியாக இருந்தாலும், பில்கேட்ஸ் வசம் இதர விலையுயர்ந்த மொடல்களும் இல்லாமல் இல்லை. மெர்சிடிஸ் பென்ஸ், லெக்சஸ் உள்ளிட்ட கார் மொடல்கள் இருப்பதாக பேட்டி ஒன்றில் பில்கேஸ்ட் கூறியிருக்கிறார்.

வாஷிங்டன் மேன்சனில் உள்ள பில்கேட்ஸ் வீட்டு கராஜில் 10க்கும் அதிகமான கார் மொடல்கள் உள்ளன.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்