மிளகினால் இந்த தீமைகளும் இருக்கு: உங்களுக்கு தெரியுமா?

Report Print Fathima Fathima in உணவு
0Shares
0Shares
lankasrimarket.com

நாம் தினந்தோறும் சமையலுக்கு பயன்படுத்தும் மிளகில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

இதில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள், நொதிகள், புரோட்டீன்கள், விட்டமின்கள் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.

ஆரோக்கியம் நிறைந்திருந்தாலும் அளவுக்கு அதிகமாக சேர்க்கும் போது பக்கவிளைவுகள் ஏற்படுகிறது.

அதிகமாக உணவில் சேர்க்கும் போது, இரைப்பை உணவுக்குழாய் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், வயிறு அசௌகரியமாக இருக்கும், சுவாச பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடலாம்.

இதுதவிர தொண்டையில் எரிச்சல், ஆஸ்துமா பிரச்சனைகளும் ஏற்படும் வாய்ப்புண்டு.

மேலும் சரும வறட்சியை அதிகப்படுத்தி தோல் உரிய ஆரம்பிக்கும், எனவே சரும வறட்சி இருப்பவர்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் சேர்த்துக் கொள்ளக்கூடாது, ஏனெனில் சில சமயங்களில் கருச்சிதைவுக்கு வழிவகுக்கும்.

இதேபோன்று தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் மிளகை தவிர்க்கவேண்டும், தாய்ப்பாலின் சுவையை மாற்றுவதோடு குழந்தைக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்