இப்படியும் மரணம் நிகழுமா? இருவரின் உயிரை பறித்த மாட்டிறைச்சி

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
2395Shares
2395Shares
lankasrimarket.com

பிரான்ஸ் நாட்டில் மது அருந்திவிட்டு மாட்டிறைச்சி சாப்பிட்ட இருவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள Authon-du-Perche என்ற பகுதியில் தான் இச்சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இப்பகுதியில் Lucien Perot(69) மற்றும் Olivier Boudin(38) என்ற நண்பர்கள் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று ஒரு பூங்காவில் இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளனர்.

இது கொலையா? அல்லது தற்கொலையா என பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலாக எழுந்துள்ளது.

சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று இருவரின் மரணம் தொடர்பான விளக்கத்தை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

அதில், இருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளனர். மேலும், இருவரும் மாட்டிறைச்சியை உணவில் சேர்த்து சாப்பிட்டுள்ளனர்.

வயதான நபரின் வாயில் பற்கள் இல்லை என்பதால் அவரால் மாட்டிறைச்சியை மென்று சாப்பிட முடியவில்லை.

அப்போது, பெரிய மாட்டிறைச்சி துண்டு ஒன்று அவரது தொண்டையில் சிக்கியுள்ளது. இறைச்சியை விழுங்க முடியாமல் மூச்சடைத்து கீழே விழுந்துள்ளார்.

நண்பர் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சியுற்ற மற்ற நபருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இறைச்சி துண்டு சிக்கிய முதியவரும் சில வினாடிகளில் உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும், இம்மரணத்தில் மூன்றாவது நபருக்கு தொடர்பு இல்லை என்பதால் இவை இயற்கை மரணம் எனக் கூறி பொலிசார் வழக்கை முடித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்