சென்னையில் தவித்த ஜேர்மன் தம்பதி: வாட்ஸ் அப் மூலம் வந்த மகிழ்ச்சி செய்தி

Report Print Raju Raju in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com

சென்னையில் மர்ம நபரால் கடத்தப்பட்ட ஜேர்மன் தம்பதிகளின் நாய் வாட்ஸ் அப் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியை சேர்ந்த ஸ்டீபன் காக்ராப் (27) மற்றும் அவர் மனைவி ஜெனின் ஆகிய இருவரும் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்தனர்.

அவர்களுடன் லூக் என்ற நாயையும் அழைத்து வந்துள்ளனர், இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சென்னை மெரினா கடற்கரைக்கு ஸ்டீபன் மற்றும் ஜெனி வந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர் நாய் லூக்கை கடத்தி சென்றார்.

இதுகுறித்து கூறிய ஸ்டீபன், ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் கிடந்த நாயான லூக்கை தாங்கள் கடந்த ஒரு வருடமாக குடும்பத்தில் ஒருவர் போல வளர்த்து வருவதாக கூறினார்.

மேலும், ஒரு தடவை எங்களை கடிக்க வந்த பாம்பிடம் இருந்து லுாக் தான் காப்பாற்றியது எனவும் நாய் இல்லாமல் பரிதவித்து வருவதாகவும் தெரிவித்தார்.

நாயை கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானம் தருவோம் எனவும் தம்பதி கூறியிருந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து வாட்ஸ் அப்பில் செய்தி பரவியது, இதையடுத்து சென்னையின் காசிமேடு பகுதியில் லூக் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தி ஸ்டீபன்- ஜெனின் தம்பதிகளை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments