திருடப்பட்ட 100 கிலோ தங்க நாணயம் மீட்பு: லெபனான் கொள்ளை கும்பல் கைது

Report Print Arbin Arbin in ஜேர்மனி
405Shares
405Shares
lankasrimarket.com

ஜேர்மனியின் பெர்லின் மியூசியத்தில் இருந்து திருடப்பட்ட 100 கிலோ அரிய தங்க நாணயம் உருக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெர்லின் மியூசியத்தில் இருந்து திருடப்பட்ட அரிய தங்க நாணயத்தை உருக்கப்பட்ட நிலையில் லெபனான் கொள்ளை கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

பெர்லினில் உள்ள போட் மியூசியத்திலிருந்து கடந்த மார்ச் மாதம் எலிசபெத் மகாராணியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள இந்த அரிய தங்க நாணயம் திருடப்பட்டது.

100 கிலோ எடை கொண்ட இந்த நாணயத்தின் மதிப்பு 3.3 மில்லியன் பவுண்டு என கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மியூசியத்தின் மேற்பார்வையாளருக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த நிலையில் பெர்லின் சிறப்பு அதிகாரிகள் குறித்த அரிய நாணயமானது உருக்கப்பட்டு தங்க கட்டிகள் வடிவில் மீட்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஜேர்மன் பொலிசார் மேற்கொண்ட பல்வேறுகட்ட அதிரடி சோதனைகளின் முடிவில் லெபனான் கொள்ளை கும்பலிடம் இருந்து இந்த நாணயம் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி இந்த கொள்ளை தொடர்பாக 18 மற்றும் 20 வயதுடைய 4 இளைஞர்களையும், அவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் பொருட்கள் உள்ளிட்டவைகளுடன் சேர்த்து கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளனர்.

இதனிடையே குறித்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 19 வயது இளைஞரை போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என கூறி விடுவித்துள்ளனர்.

மட்டுமின்றி குறித்த கொள்ளை தொடர்பில் தேடப்பட்ட 4 நபர்களையும் யூலை 12 ஆம் திகதி பெர்லினில் உள்ள Neukoelln பகுதியில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதில் ஒருவர் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய மூவரையும் விசாரணை கைதிகளாக தனித்தனியாக சிறை வைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்