ஹிட்லர் போல் வணக்கம் வைத்த சுற்றுலா பயணிகள் கைது: ஜேர்மன் பொலிசார் அதிரடி

Report Print Peterson Peterson in ஜேர்மனி
496Shares
496Shares
lankasrimarket.com

ஜேர்மனி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இருவர் அந்நாட்டு முன்னாள் சர்வாதிகாரியான ஹிட்லரை போல் வணக்கம் வைத்த குற்றத்திற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவை சேர்ந்த 36 மற்றும் 49 வயதுடைய ஆண்கள் இருவர் ஜேர்மனிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

தலைநகரான பெர்லினில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பொது இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துள்ளனர்.

அப்போது, இருவரும் ஹிட்லரை போல் நின்று ஒரு கையை உயர்த்தி வணக்கம்(Nazi salute) வைப்பது போல புகைப்படம் எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் இருவரையும் உடனடியாக கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பின்னர், 500 யூரோ பிணையில் இருவரையும் பொலிசார் விடுதலை செய்தனர்.

ஜேர்மன் நாட்டை 1933 முதல் 1945 வரை ஆட்சி செய்தவர் சர்வாதிகாரியான ஹிட்லர். இரண்டாம் உலகப்போர் மூழ்வதற்கு காரணமான ஹிட்லரின் முக்கிய அடையாளம் நாசி வணக்கமாகும்.

ஹிட்லரின் மறைவுக்கு பின்னர், ஹிட்லரையும் அவரது நாசி வணக்கத்தையும் நினைவுப்படுத்தும் யாரும் எவ்வித செயலிலும் ஈடுப்படக்கூடாது என ஜேர்மன் அரசு கடுமையான சட்டத்தை இன்றளவும் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்