வரலாற்று சாதனை படைத்த ஜேர்மனி

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மன் வரலாற்றில் இரண்டாவது முறையாக அரசு வரவு செலவினங்களில் சுமார் 18.3 பில்லியன் யூரோ நிதியை சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான அரசு மிச்சப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனியில் துறை ரீதியாக செலவினங்களை குறைத்து மக்கள் பணத்தை சேமிக்க வேண்டும் என சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் கடந்தாண்டு உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை தொடர்ந்து வரியை குறைவான அளவில் உயர்த்தியது மட்டுமில்லாமல், அரசு செலவினங்கள் வெகுவாக குறைக்கப்பட்டன.

இந்நிலையில், அரசாங்கம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், 2017-ம் ஆண்டு முதல் 6 மாதங்களில் அரசு சுமார் 18.3 பில்லியன் யூரோ நிதியை மிச்சப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேற்கு மற்றும் கிழக்கு ஜேர்மனியாக பிரிந்துக்கிடந்த ஜேர்மனி கடந்த 1990-ம் ஆண்டு ஒன்றாக இணைந்தது.

இந்நிகழ்விற்கு பின்னர் தற்போது இரண்டாவது முறையாக பெருமளவில் நிதி சேமிக்கப்பட்டுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டில் சுமார் 28.8 பில்லியன் யூரோ மிச்சப்படுத்தப்பட்டது.

தற்போது இரண்டாவது முறையாக சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலின் தலைமையிலான அரசு 18.3 பில்லியன் யூரோவை மிச்சப்படுத்தியுள்ளதால் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஏஞ்சலா மெர்க்கலிற்கு அதிகளவில் வாக்குகள் குவியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்