84 பேரை கொன்ற செவிலியர்: ஜேர்மனி பொலிசார் வெளியிட்ட ஆதாரம்

Report Print Basu in ஜேர்மனி
0Shares
0Shares
Cineulagam.com

ஜேர்மனியில் சிறையில் உள்ள ஆண் செவிலியருக்கு 84 கொலைகளுடன் தொடர்புடையதாக பொலிசார் குற்றம்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

40 வயதான நீல்ஸ் ஹோகேல் என்ற ஆண் செவிலியர் மீதே பொலிசார் குற்றம்சாட்டியுள்ளனர்.

செவிலியரான நீல்ஸ் ஹோகேல், 2015ம் ஆண்டு Bremen நகரில் உள்ள மருத்துவமனைியல் ஐசியூவில் இருந்த இரண்டு நோயாளிகளுக்கு அதிகப்படியான மருந்துகள் கொடுத்து கொன்ற வழக்கில் வாழ்நாள் சிறைதண்டளை அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொலிசார் கூறியதாவது, புலனாய்வாளர்கள் பல உடல்களை ஆய்வு செய்து வருவதாகவும், இதுவரை 84 கொலைக்கான ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளி நீல்ஸ் ஹோகேல், ஜேர்மனியின் மிக மோசமான தொடர் கொலைகாரர் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்