அகதிகள் ஜேர்மனிக்கு வரலாம்: வெளியான மகிழ்ச்சி செய்தி

Report Print Balamanuvelan in ஜேர்மனி
394Shares
394Shares
lankasrimarket.com

எதிர்ப்புகளையும் மீறி, அகதிகள் ஜேர்மனிக்கு வரலாம் என ஜேர்மனி வேலைவாய்ப்பு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ள செய்தி ஜேர்மன் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புலம்பெயர்தல் தொடர்பாக சில வாரங்களுக்கு முன்தான் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலுக்கும் உள்துறை அமைச்சர் Horst Seehoferக்கும் ஏற்பட்ட பிரச்சினை ஆட்சி கவிழும் அளவுக்கு பெரிதான பிறகும் ஜேர்மன் வேலைவாய்ப்பு அமைச்சர் Hubertus Heil இவ்வாறு அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு முடிவுக்குள் கற்ற, வேலையில் திறமையுள்ளவர்கள் எளிதில் ஜேர்மனிக்குள் வரும் வகையில் புதிய புலம்பெயர்தல் சட்டம் ஒன்றைக் கொண்டு வர இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல துறைகளில் திறம்படைத்தவர்கள் குறைவாக உள்ள நிலையில் புலம்பெயர்தலை நமது தேவைக்கான தீர்வாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் அவர்.

தகுதி படைத்தவர்கள் வேலை கிடைக்கும் முன்னதாகவே கூட ஜேர்மனிக்கு வரும் ஒரு வாய்ப்பு கூட அந்த சட்டத்தின் மூலம் உருவாக்கப்படும்.

விரைவில் இது குறித்த முக்கிய தகவல்களை தனது துறை வெளியிட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளது நிச்சயம் தகுதி படைத்த அகதிகளுக்கு ஒரு நற்செய்திதான் என்றால் மிகையாகாது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்