வாழ்க்கையை புரிந்துகொண்டேன்: குழந்தைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை ரம்பா

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

கணவருடன் தன்னை சேர்த்து வைக்கோரி நடிகை ரம்பா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், இரண்டு பெண் குழந்தையுடன் தனியாக வாழ முடியவில்லை. குடும்ப வாழ்க்கையை தற்போது புரிந்துகொண்டுவிட்டேன். கருணை அடிப்படையில் தன் கணவருடன், தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரம்பா தனது இரண்டு குழந்தைகளுடன் ஆஜரானார். அவரது கணவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

மேலும், கணவர் இந்திரகுமாரும் நீதிமன்றத்தில் ஆஜரானார். சமரச மையத்தில் இன்று மாலை 6 மணிக்குள் பிரச்னையை பேசித்தீர்க்குமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments