கொடூரத்தின் உச்சக்கட்டம்: மாணவியை பலாத்காரம் செய்த 20 பேர்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

ஜார்கண்ட் மாநிலத்தில் தனது காதலனுடன் வந்த பழங்குடியின பெண்ணை 20 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நதியா என்ற பழங்குடியின மாணவி தனது கல்லூரில் படித்த வேறு பிரிவை சேர்ந்த மாணவனை காதலித்துள்ளார்.

advertisement

இதனால் அந்த மாணவனின் சாதி பிரிவை சேர்ந்தவர்கள், பழங்குடியின பெண்ணை காதலிக்ககூடாது என எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவதினத்தன்று மாணவி தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அவர்களை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல், காதலனை சரமாரியாக அடித்து உதைத்ததுடன் செல்போனையும் பிடிங்கி கொண்டனர்.

பின்னர் காதலனை கத்தி முனையில் மிரட்டி மரத்தில் கட்டிப் போட்டு, மாணவியை மாறிமாறி கற்பழித்துள்ளனர்.

பின்னர் தங்கள் நண்பர்களுக்கும் போன் செய்து அந்த இடத்திற்கு வரவழைத்துள்ளனர், சுமார் 20 பேர் ஒன்று சேர்ந்து 3 மணிநேரம் இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

கும்பல் தப்பியதும் காதலனும் மாணவியும் அருகில் இருந்த பொலிஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்துள்ளனர்.

உடனடியாக விரைந்து சென்ற பொலிசார் அதிகாரிகள், குற்றவாளிகள் ஆறு பேரை கைது செய்துள்ளதுடன் மற்றவர்களை தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், தற்போது அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் வயது 18 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

advertisement

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்