நிர்மலாதேவி விவகாரம்! விசாரணையில் தகவல்கள்

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கல்லூரி பேராசிரியை கணவரை பிரிந்து வாழ்வது தெரியவந்துள்ளது.

மாணவிகளிடம் ஆசை வார்த்தை பேசி பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் தொடர்பில் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான விசாரணைக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை நியமித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரம் 5 பேர் கொண்ட விசாரணைக்குழுவை மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமித்து உள்ளார்.

விசாரணைக்குழு இன்று விசாரணையை தொடங்கிய நிலையில், இவரது கணவர் சரவணப்பாண்டி என்பதும், இருவரும் பிரிந்து வாழ்வதும் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சரவணப்பாண்டி சமீபத்தில் தான் ஊர் திரும்பியுள்ளார்.

இங்கு அருப்புக்கோட்டை மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வரும் அவர், கருத்து வேறுபாட்டின் காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இவர்களது மூத்த மகள் சென்னையில் படித்து வரும் நிலையில், இரண்டாவது மகள் தந்தையுடனேயே வசித்து வருகிறார்.

நிர்மலாதேவி குறித்த கேள்விக்கு சரவணப்பாண்டி கருத்து ஏதும் கூற விரும்பவில்லை என கூறிவிட்டாராம்.

இந்நிலையில் ஆளுநர் அமைத்துள்ள விசாரணைக் குழு மீது நம்பிக்கை இல்லை எனவும், சிபிசிஐடி விசாரணை தேவை என்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

விசாரணையில் தகவல்கள்

நிர்மலாதேவியின் செல்போனில் நிறைய பெண் புகைப்படங்கள் இருப்பதாக பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உயரதிகாரிகளின் செல்போன் எண்களும் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்