தங்கையின் சாதி மீறிய காதல்: விமான நிலையத்தில் பிடிபட்ட அண்ணன்

Report Print Deepthi Deepthi in இந்தியா
508Shares
508Shares
lankasrimarket.com

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாதி மீறி திருமணம் செய்துகொண்ட தங்கையை 3 ஆண்டுகள் கழித்து கடத்த முயன்ற அண்ணனை சென்னை விமான நிலையத்தில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

மித்லேஷ் குமார் மற்றும் நளினி சிங் கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்தனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு வீட்டிற்கு தெரியாமல் சாதி மாறி திருமணம் செய்து கொண்டனர்.

பெண் வீட்டார் எங்கு தேடியும் இவர்கள் தென்படவில்லை. பின்னர் மித்லேஷ் குமாரின் வீட்டில் பெண் வீட்டார் பிரச்னை செய்தபோது மித்லேஷ் குமார் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள கட்டடத்தில் பெயின்டிங் வேலை செய்து வருகிறார் என்பது தெரியவந்தது.

அதன் பின் தங்கையின் வீட்டிற்கு சென்ற அண்ணன் ரன்வீர் விஜய் சிங் 10 நாட்கள் தங்கியுள்ளார்.

அப்போது திடீரென்று நளினியின் அண்ணன், மித்லேஷ் குமார் வேலைக்கு சென்ற நேரம் பார்த்து நளினி சிங்கை சாதி மாறி திருமணம் செய்து கொண்டதற்கு கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார்.

பின் கத்தியை காட்டி மிரட்டி அவரை காரில் ஏற்றி லக்னோ செல்வதற்காக சென்னை விமான நிலையம் அழைத்து வந்துள்ளார்.

விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட பொலிசாரிடம் இதுபற்றிய தகவலை நளினி தெரிவித்தார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் விமான நிலைய பொலிசார் அவரது அண்ணனை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்