என்னது.....மலேசியா சிவகங்கையில் உள்ளதா? தலைசுற்றி போன நபர்

Report Print Deepthi Deepthi in மலேசியா
0Shares
0Shares
lankasri.com
advertisement

இந்தியாவில் பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.

இது போன்று கார்டுகள் மக்களுக்கு வழங்கப்படும்போது, முகவரிகளில் சிறுசிறு எழுத்துபிழைகள் நடப்பது வழக்கமான ஒன்றுதான் என்றபோதிலும், ஒரு நாட்டையே ஒரு மாவட்டத்தின் கீழ் கொண்டுவந்திருப்பது இதுதான் முதல் தடவை.

advertisement

அண்மையில் சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கார்டுகள் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். சுரேஷ் என்பவர் ஸ்மார்ட் கார்டு பெற்றுள்ளார். அந்த அட்டையில் "தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, குடும்ப அட்டை, குடும்பத் தலைவரின் பெயர்: ஆர். சுரேஷ், தந்தை/கணவரின் பெயர்: இராமசாமிகுருக்கள், பிறந்தநாள்: 30/06/1968" என்று இருந்தது

முகவரியில் 36, கோலாலம்பூர், மலைசியா, முறையூர், சிவகங்கை, தமிழ்நாடு, 630501 என்றிருந்தது.

இதனைப்பார்த்த சுரேஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார். சிவகங்கையில் எங்கே இருக்கிறது மலேசியா, கோலாலம்பூர் என்று தலைசுற்றி போயுள்ளார்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments