ஆப்பிள் நிறுவனத்தின் பின்னடிப்பால் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம்

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆப்பிள் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களின் வேகம் குறைவடைகின்றதற்கு மின்கலமும் ஒரு காரணம் என ஏற்கணவே தகவல் வெளியாகியிருந்தது.

இதன் காரணமாக வெறும் 29 டொலர்களில் குறித்த பிரச்சினையை எதிர்நோக்கும் ஐபோன்களின் மின்கலங்களை மாற்றித் தரவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் அறிவித்திருந்தது.

இதன்படி 2018ம் ஆண்டு ஜனவரி தொடக்கம் 2018ம் ஆண்டு டிசம்பர் வரைக்கும் இச் சலுகை அடிப்படையிலான சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

iPhone 6, the iPhone 6 Plus, iPhone 6S, iPhone 6S Plus, iPhone 7 மற்றும் iPhone 7 Plus ஆகிய கைப்பேசிகளில் மின்கலங்கள் இவ்வாறு மாற்றித்தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.ஷ

இந்நிலையில் இச் சேவையை தற்போது வழங்க முடியாத நிலை காணப்படுவதாகவும், மார்ச் மாதம் வரை வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும் எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்