அலைபேசிகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கு 21 ஆயிரம் ரூபாய் அபராதம்!

Report Print Thayalan Thayalan in பணம்
அலைபேசிகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கு 21 ஆயிரம் ரூபாய் அபராதம்!
486Shares
486Shares
lankasrimarket.com

மாடுகளை இறைச்சிக்காகக் கொல்பவர்களுக்கு எதிராகவும், அலைபேசிகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கு எதிராகவும் பெரும் அபராதத் தொகையை விதிக்க உத்தரப் பிரதேசத்தின் கிராமப் பஞ்சாயத்து ஒன்று முடிவு செய்துள்ளது.

மதுரா மாவட்டத்தில், முஸ்லிம்கள் பெருமளவில் வாழும் மதோரோ கிராமப் பஞ்சாயத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை முன்மொழிந்திருப்பவர், முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரான மொஹமட் கஃபார்.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே தாம் இந்த முடிவை எடுத்திருப்பதாக கஃபார் தெரிவித்தார். இதன்படி, மாடுகளை இறைச்சிக்காக வெட்டுபவர்களுக்கு இரண்டு இலட்ச ரூபாய் அபராதமும், மது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு இலட்சத்துப் பதினோராயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவற்றுடன், அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அலைபேசிகளைப் பயன்படுத்தினால் அவர்களுக்கு 21 ஆயிரம் ரூபாய் அபராதத்தை விதிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதங்களைத் தவிர, வேறு தண்டனைகளை பஞ்சாயத்து ஒன்று கூடி முடிவெடுக்கும் என்றும் கஃபார் கூறினார்.

மேலும் பணம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments