அமெரிக்காவிற்கு 24 வாக்குகள் கிடைக்கக் கூடிய சாத்தியம்!- இலங்கைக்கு 17 நாடுகள் ஆதரவாம்?
இலங்கைக்கு 17 நாடுகள் மட்டுமே ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்காக சீனா கடுமையான பிரச்சாரங்களில் ஈடுபட்ட போதிலும், தேவையான அளவு ஆதரவினைத் திரட்டிக் கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பிரேரணை நிறைவேற்றப்பட்டு உத்தியோகப+ர்வ முடிவுகள் வெளியிடப்படும் வரையில் சரியான தகவல்களை வழங்க முடியாது அரசாங்கத் தரப்பு அறிவித்துள்ளது.
வாக்கெடுப்பில் மொத்தமாக 46 நாடுகள் கலந்து கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் மொத்தமாக 47 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இதில் அங்கம் வகித்து வந்த லிபியாவின் உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.