குழந்தைக்கு சுவிஸ் கிராமத்தின் பெயரை சூட்டிய பெற்றோர்: ஏன் தெரியுமா?

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கிராமத்தின் பெயரை தங்களுடைய குழந்தைக்கு பெற்றோர் இருவர் சூட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த தம்பதி இருவர் கடந்தாண்டு சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இவர்களுக்கு நீண்ட ஆண்டுகளாக குழந்தை பிறக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், Bernese Oberland மாகாணத்தில் உள்ள Murren என்ற சிறிய கிராமத்தில் தம்பதி தங்கியுள்ளனர்.

இந்த கிராமத்தில் வசித்தபோது மனைவி கர்ப்பம் அடைந்துள்ளார். இச்செய்தியைக் கேட்டு கணவர் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் தாய்நாடான அமெரிக்காவிற்கு திரும்பிய சில மாதங்களுக்கு பிறகு இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

சுவிஸ் கிராமத்தில் தனது மனைவி கர்ப்பம் அடைந்ததால் அந்த கிராமத்தின் பெயரையே தங்களது குழந்தைக்கு சூட்டலாம் என கணவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கணவரின் விருப்பதை அறிந்த மனைவியும் அதற்கு சம்மதம் தெரிவித்து குழந்தைக்கு Tessa Murren எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பெற்றோர் இந்நிகழ்வை மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளனர்.

இதுக் குறித்து தகவல் அறிந்த சுவிஸ் சுற்றுலா துறை அலுவலகம் தம்பதிக்கு வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், ‘உங்களுடைய குழந்தைக்கு சுவிஸ் கிராமத்தின் பெயரை சூட்டியுள்ளது எங்களுடைய நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்’ என நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments