சுவிஸ் சிறைக்கு செல்ல விரும்பும் கைதிகள்: காரணம் இது தான்!

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தங்குவதற்கு பெருமளவிலான கைதிகள் குற்றங்களில் ஈடுப்பட விரும்புவதாக அந்நாட்டு சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுவிஸில் உள்ள லூசேர்ன் சிறைச்சாலை அதிகாரிகள் தான் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் அடைக்கப்படும் கைதிகளுக்கு வெளியில் கிடைப்பதை விட கூடுதலாக வருமானம் கிடைப்பதால் அதிகளவில் நபர்கள் சிறையில் தங்குவதற்கு விரும்புவதாக தெரியவந்துள்ளது.

உதாரணத்திற்கு, ரோமானியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் வேண்டுமென்றே குற்றங்களில் ஈடுப்பட்டு சிறையில் தங்கி வருகிறார்.

கடந்த 7 ஆண்டுகளில் மூன்று முறை குற்றங்களில் ஈடுப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார்.

கடந்தவாரம், நபருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.

இதுக் குறித்து சிறை அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், ‘வெளியில் கிடைக்கம் ஊதியத்தை விட சிறையில் பணிபுரியும் கைதிகளுக்கு அதிகளவில் ஊதியம் கிடைக்கிறது.

தற்போது சிறையில் மீண்டும் அடைக்கப்பட்ட அந்த கைதி நாள் ஒன்றிற்கு 26 பிராங்க்(4,069 இலங்கை ரூபாய்) ஊதியம் ஈட்டுகிறார்.

இந்த வருமானம் வெளியில் கிடைப்பதில்லை என்பதால் அவர் அடிக்கடி குற்றங்களில் ஈடுப்பட்டு சிறைக்கு வருகிறார்.

மேலும், எந்த குற்றத்திலும் ஈடுப்படாமல் நேர்மையாக வாழ்வதன் மூலம் வருமானம் கிடைப்பதில்லை.

எனவே, தன்னுடைய தேவைக்காக குற்றங்களில் ஈடுப்பட்டு சிறைக்கு அடிக்கடி வருவதாக ரோமானிய கைதி வாக்குமூலம் அளித்துள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்