தந்தையின் சாம்பலை கழுத்தில் அணிந்த மணப்பெண்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
0Shares
0Shares
Seylon Bank Promotion

இங்கிலாந்தை சேர்ந்த மணப்பெண் ஒருவர் இறந்து போன தந்தையின் சாம்பலை வைத்து டொலர் ஒன்று செய்து தனது கழுத்தில் அணிந்துள்ளார்.

West Midlands - ஐ சேர்ந்த Kelly Campbell என்ற பெண்ணின் தந்தை அவருக்கு 8 வயது இருக்கும் போது மூளையில்ரத்த அழுத்தம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

தந்தையின் மீது அளவு கடந்த பாசம்கொண்டிருந்த காரணத்தால், அவர் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.

இதனால், தனது தந்தை எரியூட்டப்பட்டசாம்பலை பத்திரமாக பேணிகாத்து வந்துள்ளார்.

இந்நிலையில், Luke என்ற தனது காதலரை திருமணம் செய்துகொள்ளவிருப்பதால், தனது திருமணத்தின் போது தந்தை தன்னுடனேயே இருக்கவேண்டும் என்பதற்காக, அந்த சாம்பலை வைத்து நீல நிறத்தில் பென்டன்(Pendan) செய்து கழுத்தில் அணிந்துள்ளார்.

இந்த செயினை அணிந்திருப்பது, எனது தந்தை என்னுடன் இருந்து என்னை ஆசிர்வதிப்பதுபோன்று உணர்கிறேன் என Kelly தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்