மரத்தில் மோதி தரையில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்: வைரல் வீடியோ

Report Print Basu in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் சிறியரக விமானம் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி விடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Connecticut மாநிலத்தில் உள்ள பகுதியிலே இந்த விபத்து நடந்துள்ளது. விமானத்தை ஓட்டி வந்த 79 வயதான Manfred Frost என்ற விமானி அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் தப்பியுள்ளார்.

குறித்த சிசிடிவி வீடியோவில், தாழ்வாக பறந்து வரும் சிறிய ரக விமானம், கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. விமானத்தின் இறக்கைகள் மரத்தின் கிளைகளில் சிக்கி விமானம் சரியாக தரையில் விழுகிறது.

சிறிய காயங்களுடன் மீட்கப்பட்ட விமானி Manfred Frost மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்