புதுவருடத்தினை ஆக்கிரமித்த வாட்ஸ் ஆப்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

புதுவருடப் பிறப்பானது உலக மக்களால் மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் நிகழ்வாக இருக்கின்றது.

2018 புதுவருடமானது பல புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி கொண்டாடப்பட்டுள்ளது.

இதில் வாட்ஸ் ஆப் ஊடாக அதிக குறுஞ் செய்திகள் பரிமாறப்பட்டுள்ளன.

பசுபிக் பிராந்திய நேரப்படி டிசம்பர் 31ம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் ஜனவரி முதலாம் திகதி இரவு 11.59 வரை சுமார் 75 பில்லியன் குறுஞ்செய்திகள் பரிமாறப்பட்டுள்ளன.

இவற்றுள் 13 பில்லியன் படங்கள், 5 பில்லியன் வீடியோக்கள் என்பனவும் அடங்கும்.

இதேவேளை 2017ம் ஆண்டில் வீடியோ அழைப்பு, அனுப்பிய தகவலை அழித்தல், ஸ்டேட்டஸ் போன்று சில புதிய அம்சங்களை வாட்ஸ் ஆப் புதிதாக அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்