இன்ஸ்டாகிராமின் புதிய முயற்சி: பயனர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

புகைப்படங்கள், சிறிய அளவிலான வீடியோக்கள் போன்றவற்றினை பகிரும் முன்னணி தளமாக தொடர்ந்தும் இன்ஸ்டாகிராம் விளங்கிவருகின்றது.

பல மில்லியன் பயனர்களை கொண்டுள்ள இத் தளத்தில் தற்போது புதிய சேவை ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதாவது இன்ஸ்டாகிராமின் Explore பக்கத்தில் விளம்பரங்களை காட்சிப்படுத்த அந்நிறுவம் தீர்மானித்துள்ளது.

பயனர்கள் அதிகம் விரும்பி தேடும் விடயங்களுக்கு அமைவாக விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இச் சேவை அறிமுகம் செய்வதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் விளரம்பர சேவையினை பயனர்கள் வரவேற்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்