சிறுநீரகத்தின் நிலையை கண்டறிய இதோ வந்துவிட்டது மொபைல் ஆப்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
188Shares

அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று பல்வேறு நோய்களை கண்டறிவதற்கும் மொபைல் அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இதேபோன்று சிறுநீரகத்தின் நிலையை அறிவதற்கான அப்பிளிக்கேஷனும் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

சிறுநீகத்தில் ஏற்படும் தொற்றுக்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காதுவிடின் அது ஏனைய அங்கங்களுக்கும் விரைவாக பரவி பாரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

எனவே சிறுநீகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கவேண்டியது அவசியம் ஆகும்.

இதனைக் கருத்தில் கொண்டே குறித்த அப்பிளிக்கேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் உதவியுடன் சராசரியாக 14 நிமிட நேரத்தில் சிறுநீரகத்தின் நிலையை துல்லியமாக கண்டறிய முடியும்.

ஐக்கிய இராச்சியத்தின் Royal Free வைத்தியசாலையில் இந்த அப்பிளிக்கேஷன் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறுநீகப் பாதிப்பினால் ஐக்கிய இராச்சியத்தில் ஆண்டுதோறும் 100,000 நபர்கள் மரணமடைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்