வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
973Shares

முன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப் ஆனது பல மில்லியன் கணக்கான பயனர்களால் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இப் பயனர்களை இலக்கு வைத்து தற்போது புதிய குற்றச் செயல் ஒன்று இடம்பெற்று வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஆடியோ ஒன்றினை அனுப்புவதன் ஊடாக இந்த குற்றச் செயல் இடம்பெற்று வருகின்றது.

25 இலட்சம் பெறுமதியான அதிர்ஷ்ட இலாபச் சீட்டினை வென்றுள்ளதாக குறிப்பிட்டு குறித்த ஆடியோ பரப்பப்டுகின்றது.

அத்துடன் குறித்த பணத்தினை பெறுவதற்காக 8,000 முதல் 10,000 வரையான பணத்தினை முதலில் தாம் வழங்கும் கணக்கில் வைப்புச் செய்யுமாறும் குறித்த ஆடியோவின ஊடாக கோரப்படுகின்றது.

எனவே தெரியான கைப்பேசி இலக்கங்களிலிருந்து அனுப்பப்படும் குறித்த ஆடியோவினை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை இந்தியாவின் மும்பையிலுள்ள SBI விடுத்துள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்