உங்க ராசி என்ன? இந்த திதியில் கவனமாக இருங்கள்

Report Print Printha in ஜோதிடம்
789Shares
789Shares
lankasrimarket.com

சுப காரியங்கள் செய்ய பார்க்கப்படும் திதி சந்திரனின் நாளாகும், இதில் மொத்தம் 30 திதிகள் உள்ளது.

அதாவது வளர் பிறையான அமாவாசையை அடுத்து சதுர்த்தசி வரை வரும் 15 திதிகள் சுக்லபட்சம் என்றும், பௌர்ணமி அடுத்து சதுர்த்தசி வரை வரும் 15 திதிகள் கிருஷ்ண பட்சம் என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தகைய திதிகளில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க எந்த ராசிக்காரர்கள் எந்த திதியில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்..

எந்த ராசிக்காரர்கள் எந்த திதியில் கவனமாக இருக்க வேண்டும்?

 • மேஷம் - சஷ்டி

 • ரிஷபம் - சதுர்த்தி, திரயோதசி

 • மிதுனம் - பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி

 • கடகம் - சப்தமி

 • சிம்மம் - திருதியை, சஷ்டி, நவமி, தசமி, திரயோதசி

 • கன்னி - பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி

 • துலாம் - பிரதமை, துவாதசி

 • விருச்சிகம் - நவமி, தசமி

 • தனுசு - துவிதியை, ஸப்தமி, ஏகாதசி, சதுர்த்தசி

 • மகரம் - பிரதமை, திருதியை துவாதசி

 • கும்பம் - சதுர்த்தி

 • மீனம் - துவிதியை, ஏகாதசி, சதுர்த்தசி

இந்த வளர்பிறை, தேய்பிறை திதிகளில் மேற்கூறியப்படி உள்ள ராசிக்காரர்கள் கவனமாக செயல்பட வேண்டும். இந்த நாட்களில் மற்றவர்களிடம் பழகும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நல்ல நாட்கள் பார்க்க உதவும் திதிகள்?

முதல் நாள் பிரதமை, 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை அதன் பின் சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி என்று அமாவாசையில் முடியும்.

இந்த காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறை திதிகள் என்று கூறப்படுகிறது. இவை அனைத்து திதிகளும் நல்ல நாட்கள் பார்க்க உதவுகிறது.

ஆனால் தேய்பிறை பஞ்சமி வரையிலும் வளர்பிறை காலம் போல நல்ல பலன் உள்ளது.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்