உங்க ராசி என்ன? 2018ல் இந்த தேதியில் திருமணம் செய்யுங்கள்: அதிர்ஷ்டம் தேடி வருமாம்

Report Print Fathima Fathima in ஜோதிடம்

ஒவ்வொரு ஆண்டிற்கும் சில அதிஷ்ட தினங்கள் உள்ளது. அதேபோல் இந்த ஆண்டில் திருமணம் செய்வதற்கு எந்த ராசிக்காரர்களுக்கு எந்த திகதி அதிர்ஷ்டமாக இருக்கும் என்று ஜோதிடம் கூறுவதை பார்க்கலாம்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு 27-ம் திகதி மிகவும் அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கிறது. இந்த திகதியில் திருமணம் செய்தால் குடும்ப வாழ்க்கையில் அதிக வாக்குவாதங்கள், பிரச்சனைகள் இல்லாமல், குடும்ப வாழ்க்கையில் இன்பம் அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு திருமணம் செய்வதற்கு 7-ம் திகதி அதிர்ஷ்ட நாளாக உள்ளது. ஆனால் இவர்கள் தங்களது சுய தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது, தங்களது துணையின் காதலையும், துணைக்கு உற்ற துணையாக இருக்க வேண்டியது எப்படி என்பதை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய அந்த அதிர்ஷ்டமான திகதி 9 ஆகும். இந்த திகதியில் திருமணம் செய்தால், திருமண வாழ்க்கை அமோகமாக இருப்பதுடன், வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு திருமணம் செய்வதற்கு அதிர்ஷ்டமான திகது 15 ஆகும். இந்த திகதியில் திருமணம் செய்தால் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும், அதிர்ஷ்டங்களையும் பெற்று வாழ்வார்கள். ஆனால் கணவன், மனைவிக்கு இடையேயான புரிதலை வளர்த்துக் கொள்வது அவசியம்.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு திருமணம் செய்வதற்கு அதிர்ஷ்டமான திகதி 3 ஆகும். இவர்கள் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க பழகிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பாசம், அக்கறை அதிகம் கொண்ட இவர்களது திருமண வாழ்க்கையில் இன்பம் அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு திருமணம் செய்வதற்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் திகதி 11 ஆகும். இந்த திகதியில் திருமணம் செய்து கொண்டால், இவர்களின் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்.

ஆனால் இவர்கள் மற்றவர்கள் செய்த தவறுகளை மன்னிக்க கற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு திருமணம் செய்வதற்கு அதிர்ஷ்டமான திகதி 2 ஆகும். இவர்கள் தங்களது வாழ்க்கையில் என்னென்ன எப்போது எப்படி நடக்க வேண்டும் என்ற கணிப்பு வைத்திருப்பார்கள்.

அதே சமயம், இவர்கள் தங்களது வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்களை எப்படி சமாளித்து, மன அழுத்தம் இல்லாத ஒரு வாழ்க்கையை நடத்துவது என்பதை கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு திருமணம் செய்வதற்கு 18-ம் திகதி அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இந்த திகதியில் திருமணம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை பெறலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையில் இணைய அதிர்ஷ்டமான திகதி 21 ஆகும். இது இவர்களுக்கு வாழ்க்கையில் பெருமளவு வெற்றியை தரக்கூடிய ஒரு நாளாக இருக்கும்.

அதே சமயத்தில் நீங்கள் பொறுமையாக செயல்பட வேண்டியது அவசியமாகும்.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு திருமணம் செய்வதற்கு அதிர்ஷ்டமான திகதி 30 ஆகும். இதனால் திருமண வாழ்க்கையில் பலதரப்பட்ட நல்ல அனுபவங்களை சந்திக்கக் கூடும்.

அதே சமயத்தில் வாழ்க்கையில் வெற்றியடைய இவர்களுக்கு தன்னம்பிக்கை என்பது மிக அவசியமான ஒன்றாகும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு திருமணம் செய்வதற்கு அதிர்ஷ்டமான திகதி 14 ஆகும். ஆனால் இவர்கள் தங்களது வாழ்க்கை துணை மீது அதிக அக்கறையும், அவர்களுக்கு துணையாக இருக்கவும் கற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு திருமணம் செய்வதற்கு 20-ம் திகதி மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இவர்கள் தங்களது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களில் எது உண்மையானது, எது நாடகம் என்று பிரித்து அறியும் திறன் கொண்டிருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்