சகோதரியுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே படுகொலை: உறையவைத்த சம்பவம்

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் நள்ளிரவில் 21 வயது மாணவி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மாணவி தன் சகோதரியுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே படுகொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏயா மாசர்வி என்ற அந்த 21 வயது மாணவியை கொலை செய்தவர்களைக் கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்று பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய மாணவியின் உடல் கொலையுண்ட நிலையில் மெல்போர்ன் பல்கலைக் கழக வளாகம் அருகே கிடந்துள்ளது.

இது ஓரு அப்பாவி இளம் பெண் மீது நடத்தப்பட்டுள்ல படுபயங்கரமான படுபாதகச் செயல், அவர் நம் நகருக்கு வருகை தந்துள்ள விருந்தாளி என காவல்துறை உயரதிகாரி ஆண்ட்ரூ ஸ்டாம்பர் மெல்போர்னில் தெரிவித்துள்ளார்.

மெல்போர்ன் நகரில் செயல்பட்டுவரும் லா ட்ரோப் பல்கலைக் கழகத்துடன் தொடர்புடைய கல்விப்புல மாணவி ஏயா மாசர்வி.

இவர் கொமடி கிளப்பிலிருந்து பந்தூரா புறநகர்ப்பகுதிக்கு ட்ராமில் சென்றுள்ளார். ஆனால் நள்ளிரவில் இவர் கொலையாளிகளைச் சந்தித்திருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் உள்ள தன் சகோதரியுடன் பேசிக்கொண்டே வரும் போது திடீரென போன் கீழே விழுந்ததும் சிலபல குரல்களும் எதிர்முனையில் உள்ள சகோதரிக்குக் கேட்டுள்ளது.

ட்ராமிலிருந்து இறங்கியவுடன் இந்தப் படுகொலை நடந்துள்ளது. காலை 7 மணிக்கு அவ்வழியாக நடந்து செல்பவர்கள் மாணவியின் உடலைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே பாலியல் பலாத்காரத் தாக்குதலாக இருக்குமோ என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று தாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று இஸ்ரேலில் குடியிருக்கும் ஏயா மாசர்வியின் குடும்பத்தினர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்