அவுஸ்திரேலியா விசா குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளவர்களில் பிராந்திய பகுதிகளில் வசிக்க விரும்பும் குடியேறிகளின் விசா விண்ணப்பங்கள் விரைவில் பரிசீலனை செய்யப்படும் என குடிவரவு துறை அமைச்சர் David Coleman தெரிவித்துள்ளார்.

சிட்னி, மெல்பேர்ன், குயின்ஸ்லாந்து போன்ற நகரங்களில் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் குறித்த நகரங்களில் நெருக்கடி ஏற்படுவதாகத் தெரிவித்த அரசு, பிராந்திய பகுதிகளில் புதிய குடியேறிகளை அனுப்புவதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

அதிகரித்து வரும் சனத்தொகை மற்றும் நகரங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் பிரதேச செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிராந்திய பகுதிகளில் புதிய குடியேறிகளை அனுப்பும் திட்டத்திற்கென அடுத்த 4 ஆண்டுகளுக்கு 19.4 மில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பிராந்திய பகுதிகளில் வியாபார நிறுவனங்களில் மேலதிக பணியாளர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் குடிவரவு அதிகாரிகள் நேரில் சென்று ஆராய்வார்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதனால் இந்த திட்டத்தின் கீழ் பிராந்திய பகுதிகளில் வாழ இணங்கும் புதிய குடியேறிகளின் விசா விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்படுவதுடன் வெளிநாட்டிலிருந்து பணியாளர்களை வேலைக்கு வரவழைப்பது தொடர்பில் புது ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவுஸ்திரேலியாவில் புதிதாக குடியேறுபவர்கள் சுமார் 5 வருடங்கள் பிராந்திய பகுதிகளில் வாழ்ந்தால் மட்டுமே நிரந்தர குடியுரிமை பெறமுடியும் என்பதாக மாற்றம் கொண்டுவரப்படலாம் என அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers