ஒற்றை டாட்டூ... இரண்டான குடும்பம்: மகளுக்காக சிறை தண்டனையை எதிர்நோக்கும் தந்தை

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா
522Shares

அவுஸ்திரேலியாவில் ஒரே ஒரு டாட்டூவால் இளம்பெண் ஒருவர் தாயாருடன் பேச மறுப்பதுடன், இந்த விவகாரத்தில் அவரது தந்தை நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் தற்போது 17 வயதாகும் கேசி விக்டரி. இவர் 15 வயதாக இருக்கும் போது தனது கணுக்காலில் டாட்டூ ஒன்றை பதித்துக் கொள்ள ஆசைப்பட்டுள்ளார்.

ஆனால் அதற்கு நியூ சவுத் வேல்ஸ் மாகாண சட்டப்படி பெற்றோரின் எழுத்துப்பூர்வமான அனுமதி தேவைப்பட்டது.

ஆனால் அப்போது கேசி தமது விவாகரத்தான தந்தையுடன் தங்கியிருந்தார். அவர் தமது மகளின் கோரிக்கையை ஏற்று டாட்டூ பதித்துக்கொள்ள அனுமதித்துள்ளார்.

இந்த நிலையில் கேசியின் தாயார் தமது முன்னாள் கணவரின் முடிவை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன், கேசியின் தந்தை பிராட்லியை தற்போது நீதிமன்ற விசாரணையை எதிகொள்ள வைத்துள்ளார்.

திட்டமிட்டு உடல் ரீதியான துன்புறுத்தல் ஏற்படுத்துதல், காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் பிராட்லி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தாம் தந்தையின் முடிவை ஏற்றுக்கொள்வதாக கூறும் கேசி, தற்போது 3 ஆண்டுகளாக தாயாருடன் பேசுவதையும் நிறுத்திக் கொண்டுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்