உங்க கழுத்தில் இப்படி அசிங்கமான சுருக்கங்கள் உள்ளதா? அதனை போக்க இதோ சில எளிய வழிகள்!

Report Print Kavitha in அழகு

பொதுவாக வயது போக போக நமது உடலில் பல்வேறு மாற்றம் ஏற்படும். அதில் முக்கியமானது தோல் சுருக்கங்கள்.

இது முகம், கழுத்து, கைகள் போன்ற இடங்களில் தான் முதலில் தோன்றுகின்றது. அவை தீங்கு உண்டாக்கும் புறஊதா கதிர்களால் எளிதில் தாக்கப்பட்டு இந்த நிலை உண்டாகிறது.

இதன் காரணமாக இந்த பகுதிகள் எளிதில் வயது முதிர்ச்சிக்கான அறிகுறிகளை விரைவில் வெளிப்படுத்துகிறது என கருதப்படுகின்றது.

அதிலும் இதனை போக்குவதற்கு நாம் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்து பகுதிக்கு கொடுப்பதில் நாம் தவறிவிடுகிறோம்.

இதனால் சீக்கிரம் கழுத்தில் கோடுகள் விழுந்து சுருக்கங்கள் ஏற்படுகின்றது.

அந்தவகையில் தற்போது இந்த அழகை கெடுக்கும் அசிங்கமான சுருக்கங்களை எப்படி போக்கலாம் என பார்ப்போம்.

pinterest
  • உங்கள் முகத்தைக் கழுவும் போது கழுத்தையும் சுத்தம் செய்ய மறக்க வேண்டாம். இதனால் உங்கள் கழுத்து பகுதியில் இருக்கும் அழுக்கு, நச்சு போன்றவை வெளியேறலாம்.
  • சோப்பு பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள். இது உங்கள் சருமத்தின் pH சமநிலையை மாற்றுகிறது. மூலிகை க்ளென்சர் (cleanser) அல்லது மூலிகை சோப்பு பயன்படுத்தலாம்.
  • வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது சூரிய ஒளியில் இருந்து உங்கள் கழுத்தைப் பாதுகாக்க சன் ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள்.
  • வாரத்திற்கு ஒரு முறை உங்கள் கழுத்து பகுதியை எக்ஸ்போலியேட் செய்து கொள்ளுங்கள். இதனால் இறந்த அணுக்கள் அகற்றப்பட்டு சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
  • சருமம் நீர்ச்சத்துடன் இருப்பதால் சுருக்கங்கள் குறைவாகக் காணப்படும் மற்றும் கோடுகள் உண்டாவது தடுக்கப்படும். எனவே அதிகளவு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
  • போட்டுலினம் டாக்ஸின் (Botulinum toxin ) ஊசி மற்றும் எஸ்தடிக் அறுவை சிகிச்சை போன்றவற்றைப் பயன்படுத்தி கழுத்து சுருக்கங்களைக் குறைக்கலாம்.
  • வைட்டமின் சி மற்றும் ரெட்டினால் அடிப்படைக் கொண்ட க்ரீம் அல்லது சீரம் பயன்படுத்தலாம். இவை ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாக இருந்து, புறஊதா கதிர்களின் தாக்கத்தைக் குறைக்கின்றன. இதனால் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கிறது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்