கைகளை பட்டுப்போன்று வைத்திருக்க வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்

Report Print Kavitha in அழகு
289Shares

பெண்களின் கைகள் இயற்கையில் மென்மையானவை. ஆனால், வீட்டு வேலை, வாகனம் ஓட்டுவது, கீ-போர்டில் தட்டுவது போன்ற இயக்கங்களால் அவர்கள் கைகள் சொரசொரப்பாகவும், கடினமாகவும் மாறிவிடுகிறன.

முகத்தில் காணப்படும் தோலைப் போலவே, கைகளின் பின்புறம் காணப்படும் தோலும் மிகவும் மென்மையானது. எனவே, முகத்தைப் போலவே, கைகளுக்கும் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும்.

அந்தவகையில் கைகளை மென்மையுடன் வைத்து கொள்ள உதவும் சில எளிய இயற்கை முறைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • சர்க்கரை, ஆலிவ் எண்ணெய், எலுமிச்சைச்சாறு. மூன்றையும் தேவையான அளவு எடுத்து நன்றாக கலந்து கைகள் மீது நன்றாக ஸ்க்ரப் செய்யவும். வட்ட வடிவில் மசாஜ் செய்தபடி மேலிருந்து கீழ் வரை ஸ்க்ரப் செய்ய வேண்டும். வாரம் இரண்டு நாள் அல்லது ஒரு நாள் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்.

  • அவகேடோ பழத்தை நன்றாக மசித்து அதில் முட்டையை உடைத்து கலக்கவும், மஞ்சள் கரு சேர்த்தால் நல்லது தவிர்க்க விரும்பினால் முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து எலுமிச்சைசாறு கால் டீஸ்பூன் அளவு சேர்க்கவும். இதை கை முழுக்க தடவி 30 நிமிடங்கள் கழித்து காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். முட்டையின் மஞ்சள் கருவை பயன்படுத்தினால் சோப்பு கொண்டு கழுவவும். இதனால் கைகள் பளிச்சென்று அழகாக இருக்கும்.

  • கடினமான கைகளை மென்மையாக்க தூங்குவதற்கு முன்பு ஆலிவ் எண்ணெய் கொண்டு இலேசாக மசாஜ் செய்யலாம். இதனால் கைகள் பொலிவடையும். இதே போன்று பாதங்களுக்கும் செய்யலாம். தினமும் இப்படி செய்துவந்தால் ஒரு வாரத்தில் கைகளில் பொலிவு உண்டாவதை பார்க்கலாம்.

  • வறண்ட சருமத்தை கொண்டிருப்பவர்கள் சிட்ரஸ் பழங்களின் சாறு பயன்படுத்தும் போது அதனுடன் ஆலிவ் ஆயில் அல்லது வைட்டமின் இ ஆயில் கலந்து பயன்படுத்தலாம் எலுமிச்சை தோல் ஆரஞ்சு தோலை பொடியாக்கியும் சாறில் கலந்து பயன்படுத்தலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்