வயலில் திடீரென வெளியேறிய நச்சுவாயு: 10 பேர் கவலைக்கிடம்

Report Print Gokulan Gokulan in கனடா

கனடாவின் டெல்டா நகரில் உள்ள வயல் ஒன்றில் கார்பன் -மோனாக்சைடு வகையிலான நச்சுவாயு திடீரென வெளியேறியதால் 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விண்ட்செட் பார்ம்ஸ் என்னும் பசுமையான வயலில் ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

அப்போது திடீரென கசிந்த நச்சு வாயு காற்றுடன் கலந்துள்ளது, இந்த நச்சுக்காற்று வெளியேற வழியில்லாததால் அதனை சுவாசித்த ஊழியர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், 13 ஆம்புலன்ஸ் வண்டிகளின் உதவியோடு பாதிக்கப்பட்ட 42 ஊழியர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அனைவரும் வெவ்வேறு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், 32 நபர்கள் நிலையான உடல்நிலையில் இருப்பதாகவும் 10 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers