கனடாவில் கஞ்சா பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: காரணம் என்ன?

Report Print Raju Raju in கனடா

கனடாவில் மருத்துவ காரணங்களுக்காக கஞ்சா பயன்படுத்துவது அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்த அறிக்கையை நாட்டின் பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் இறுதி வரை கஞ்சா பயன்படுத்த வேண்டும் என நாட்டில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 235,621-ஐ கடந்துள்ளது, கடந்த மார்ச் மாதத்தை விட இது 40 சதவீதம் அதிகமாகும்.

கஞ்சாவை பயன்படுத்தும் 0.6 சதவீத மக்கள் அதை வலிநிவாரணியாக பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

பொழுதுபோக்கு பயன்பாட்டுக்காக கஞ்சாவை பயன்படுத்த அனுமதிப்பது குறித்து கனடா வரும் யூலை மாதம் முடிவெடுக்கவுள்ளது.

இந்நிலையில் கஞ்சா ஏற்றுமதியில் அமெரிக்கா முன்னணியில் இருந்து வருகிறது. நாட்டின் அட்டர்னி ஜெனரல் ஜெப் செசன், தற்போது பொழுதுபோக்குக்காக அமெரிக்காவின் பல மாகாணங்களில் கஞ்சா பயன்படுத்தப்படும் அனுமதியை ரத்து செய்ய திட்டம் உள்ளதாக கூறியுள்ளார்.

இதன் காரணமாக கனடாவில் கஞ்சா வரத்து திடீரென குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்