கனடாவில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி தீ விபத்து: மூவர் காயம், ஒருவர் நிலைமை கவலைக்கிடம்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் Montreal பகுதி நெடுஞ்சாலையில் நடந்த விபத்து ஒன்றில் சிக்கி மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

நெடுஞ்சாலைப் பணியில் ஈடுபடுவோரை பாதுகாப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து பாதுகாப்பு லொறி ஒன்றின் மீது வேகமாக வந்த ட்ராக்டர் மோதியது.

பின்னர் சாலைத் தடுப்பின் மீது மோதியதில் எதிர்பாராத விதமாக ட்ராக்டர் தீப்பிடித்தது.

போக்குவரத்து பாதுகாப்பு லொறியிலிருந்த ஊழியர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ட்ராக்டர் டிரைவரும், தீக்காயம் பட்ட இன்னொரு நபரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு வசதியாக கிளைச் சாலை ஒன்று மூடப்பட்டது.

இந்த விபத்து உள்ளூர் நேரப்படி காலை 3.30 மணியளவில் நடைபெற்றது.

நெடுஞ்சாலை 40ம் பல மணி நேரங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்