விமானத்தின் இறக்கை மீது நின்றபடி வீடியோ எடுத்த நபருக்கு நேர்ந்த கதி

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் விமானம் ஒன்றின் இறக்கைமீது நின்றபடி வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் உள்பகுதியில், Westwold பகுதிக்கு அருகில் wing walking எனப்படும் விமானத்தின் மீது நடக்கும் செயலில் ஈடுபட்டவாறே வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார் ஒருவர்.

திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழக்க, நிலை தடுமாறிய அவர் விமானத்தின் இறக்கையிலிருந்து கீழே விழுந்தார்.

விமானம் தரையை நெருங்கிக் கொண்டிருந்ததால் அவருக்கு தனது பாராசூட்டை திறக்கக்கூட நேரமில்லை.

வயல் ஒன்றில் முகங்குப்புற விழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers