மாணவிகளின் ஸ்கர்ட்டை அளந்த பிரின்சிபலின் கமெண்ட்: சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ

Report Print Balamanuvelan in கனடா

ஒண்டாரியோ பள்ளி ஒன்றில் மாணவிகளின் ஸ்கர்ட்டின் உயரத்தை அளந்த பிரின்சிபலின் கமெண்ட், மாணவிகள் மற்றும் பெற்றோரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகளின் ஸ்கர்ட்டின் உயரம் பள்ளியின் டிரெஸ் கோடுக்கு உட்பட்டிருக்கிறதா என்பதை அறிவதற்காக ஸ்கர்ட்களின் உயரத்தை அளந்த St. Theresa’s Catholic உயர்நிலைப் பள்ளியில் பிரின்சிபலான Bern Tate, Me Too இயக்கத்தைப்போல நீங்கள் இந்த கட்டிடத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆணையும் அசௌகரியமாக உணரச் செய்கிறீர்கள் என்றார்.

அவருக்கு தெரியாமல் ஒரு மாணவி எடுத்த வீடியோவில் அது பதிவாகியுள்ளதோடு, இன்னொருவர் அந்த ஸ்கர்ட் மிகவும் குட்டையாக உள்ளது என்று கூறுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

Hannah Arbour என்ற மாணவி, Me Tooவுக்கு இந்த விடயத்தை ஒப்பிட்டு கூறிய பிரின்சிபலின் கருத்து தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக தெரிவித்துள்ளார்.

எனது உடையின் நீளம் சரியாக இல்லை என இதுவரை நான் நினைத்ததேயில்லை, அதை மீண்டும் சரி பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர் உருவாக்கி விட்டார் என்கிறார் அவர்.

12ஆம் வகுப்பு மாணவி ஒருவரின் தாயாகிய Kim Masin கூறும்போது, கல்வியாளர்கள், மாணவர்கள் என்ன உடை அணிய வேண்டும், எப்படி அணிய வேண்டும் என்று கூறுவதெல்லாம் சரிதான், ஆனால் அதை Me Tooவுடன் ஒப்பிட்டிருக்க வேண்டாம் என்கிறார்.

பின்னர் பள்ளி போர்டின் இயக்குநரான Brian Beal, பிரின்சிபல் தனது வார்த்தைகளுக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி போர்டு உறுப்பினர்கள் அனைத்து பிரின்சிபல்களுடனும் பேச இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers