கனடா துரோகம் இழைக்கிறது! வெனிசுலா ஜனாதிபதி குற்றச்சாட்டு

Report Print Kabilan in கனடா

கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் வெனிசுலா அரசுக்கு துரோகம் இழைப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மடுரோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

வெனிசுலா நாட்டில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிகோலஸ் மடுரோ வெற்றி பெற்றார். ஆனால் அவர் சூழ்ச்சி செய்து ஆட்சியைப் பிடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. கனடாவும் நிகோலஸ் மடுரோ வெற்றி குறித்து கண்டனம் தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து, மடுரோவிற்கு எதிராக அந்நாட்டில் போராட்டம் துவங்கியது. தற்போது போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சி தலைவரான ஜுவான் கெய்டோ தன்னை ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்டார்.

இதற்கு கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவிப்பதாக மடுரோ கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முன்பு மண்டியிட்டு கிடக்கின்றன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெனிசுலா அரசுக்கு அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் துரோகம் இழைக்கின்றன என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் 8 நாட்களில் மீண்டும் தேர்தலை நடத்துவது குறித்து ஜனாதிபதி நிகோலஸ் மடுரோ அறிவிக்கவில்லை என்றால், ஜுவான் கெய்டோவை ஜனாதிபதியாக அங்கீகரிக்க இருப்பதாக பிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகள் தெரிவித்துள்ளன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers