கனடாவை உலுக்கிய கொடூர பேருந்து விபத்து: குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க கோரிக்கை

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர பேருந்து விபத்துக்கு காரணமான லொறி சாரதிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

சாலை விதிகளை புறக்கணித்து கொடூர விபத்துக்கு காரணமான குறித்த சாரதியை ஒருபோதும் மன்னிக்க முடியாது என பலர் வாதிட்டுள்ளனர்.

கனடாவின் சாஸ்கடூன் நகரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த கொடூர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் கால்கரி பகுதியில் குடியிருக்கும் ஜஸ்கிரட் சிங் சித்து என்பவர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.

சம்பவத்தன்று Humboldt Broncos அணியினருடன் புறப்பட்டு சென்ற பேருந்து மீது ஜஸ்கிரட் சிங் சித்துவின் லொறி பலமாக மோதியுள்ளது.

இதில் 16 விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டதுடன் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த பலர் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையில் சித்து, 4 சாலை பாதுகாப்பு எச்சரிக்கைகளை பின்பற்றவில்லை எனவும் இதனாலையே விபத்து நேர்ந்தது எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சித்து போதிய பயிற்சி இல்லாத சாரதி எனவும், குறிப்பிட்ட காரணங்களால் அவரது கவனம் சிதறியது எனவும் அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

30 வயதான சித்து மீது 29 பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ள நிலையில், தமது நிலையை விளக்கி சித்து மன்னிப்பு கோரியுள்ளார்.

இருப்பினும் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு கோரியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers