பாலியல் தொழிலாளிகள் பட்டியலின் கீழ் தங்கள் பெயரைக் கண்டு அதிர்ச்சியுற்ற 26 இளம்பெண்கள்: நடந்தது என்ன?

Report Print Balamanuvelan in கனடா

பாலியல் தொழிலாளிகளுக்கு அரசு வழங்கும் உதவியைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்ட ஆவணத்தில் தங்கள் பெயர் இருப்பதை அறிந்த டொராண்டோவைச் சேர்ந்த 26 இளம்பெண்கள் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனர்.

டொராண்டோவில் பாலியல் தொழிலாளிகளுக்கு உதவும் நோக்கில் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அவர்களுக்கு மறுவாழ்வு அமைத்து தருவதாக, Rosedaleஐச் சேர்ந்த Leonie Tchatat என்ற ஒரு பெண்ணும் அவரது கணவரான Guy Taffo என்பவரும் அரசிடம் விண்ணப்பித்து 1.5 மில்லியன் டொலர்கள் ஊழல் செய்துள்ள விடயம் வெளியாகியுள்ளது.

La Passerelle என்ற நிறுவனத்தில் பணி புரிந்த இரண்டு பெண்களிடம், பெண்கள் முன்னேற்றத்திற்காக ஒரு கூட்டமும் வேலைக்கான பயிற்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தங்கள் நண்பர்கள் பலரை அழைத்து வருமாறும் கூறப்பட்டது.

அதன்படி 2018ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி டொராண்டோவில் அமைந்துள்ள பெரிய ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற அந்த கூட்டத்திற்கு 26 பெண்கள் வந்தனர்.

வந்த பெண்களுக்கு உணவு உண்பதற்காக ஒரு உணவு அட்டை வழங்கப்பட்டது.

அவர்கள் 20இலிருந்து 25 டொலர்கள் மதிப்புள்ள உணவை உண்ணலாம் என அவர்களுக்கு

கூறப்பட்டது.

பின்னர் அந்த பெண்களிடம் ஒரு விண்ணப்பப்படிவம் கொடுக்கப்பட்டது. அதில் அவர்கள் தங்களைக்குறித்த விவரங்களை நிரப்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

இதற்கிடையில், 12 முதல் 17 வயதுக்குட்பட்ட பாலியல் தொழிலாளிகளுக்கு உதவும் நோக்கில் தன் அமைப்பு செயல்படுவதாக கூறி விண்ணப்பித்திருந்த Leonie Tchatatக்கு சொந்தமான La Passerelle என்ற நிறுவனம், பின்னர், பணத்துக்காக ரகசியமாக உடலை முதலீடு செய்யும் இளம்பெண்களுக்கு உதவுவதாக மாற்றிக் கூறியது அதன் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

களத்தில் இறங்கிய பிரபல பத்திரிகை ஒன்று அந்த 26 பெண்களில் சிலரை பேட்டி கண்டது.

தங்கள் பெயர் பாலியல் தொழிலாளிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை அறிந்த அந்த பெண்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

பின்னர்தான் பல மில்லியன் டொலர்களை அரசிடம் மட்டுமல்லாமல் பல தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் பெற்ற La Passerelle, அது கூறியிருந்தது போல, பாலியல் தொழிலாளிகளுக்காக எந்த உதவியும் செய்யாமல் மோசடி செய்திருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து இந்த மாபெரும் மோசடி குறித்த விசாரணை நடந்து வருகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers