விண்வெளியில் இருந்து ஏலியன் அனுப்பிய சிக்னல்! ஆதாரத்தை வெளியிட்ட கனடா

Report Print Raju Raju in கனடா

விண்வெளியில் இருந்து ஏலியன்கள் மர்மமான முறையில், பூமிக்கு சிக்னல் அனுப்பியுள்ளதாக கனடாவிலுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஏலியன் சிக்னலை விஞ்ஞானிகள் எப்ஆர்பி என்று அழைக்கின்றனர்.

இந்த சிக்னலை ஏலியன்கள் தான் அனுப்பியுள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

விண்வெயில் இருந்து வந்த 8 ஏலியன் சிக்னல்கள் டெலிஸ்கோப் மையத்திற்கு கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எப்ஆர்பி கள் ரேடியோ அலைகளின் குறுகிய சிக்னல் கொண்டாதாகும். இவை ஒரே நேரத்தில் மில்லி விநாடிகள் மட்டுமே வந்தன.

எப்ஆர்பிகள் எங்கிருந்து வருகின்றன என்பது வானியலாளர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு புதிய கண்டறிதலும், மர்மத்தைத் தீர்ப்பதற்கு நம்மை நெருங்குகிறது.

மீண்டும் கனடாவில் கண்டறியப்பட்ட எட்டு புதிய எப்ஆர்பி கள் ரேடியோ அலைகள் குறுகிய சிக்னல் கொண்டது. இது கனேடிய ஹைட்ரஜன் இன்டென்சிட்டி மேப்பிங் பரிசோதனை (சைம்) தொலைநோக்கியைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டது.

மெக்கில் விண்வெளி நிறுவனத்தின் பிஎச்.டி மாணவி பிரக்யா சாவ்லா இதுகுறித்த ஆய்வறிக்கையும் எழுதியுள்ளார்.

அவர் கூறுகையில், இதுபோன்ற 8 ஆதாரங்களையும் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது. எங்களிடம் இன்னும் நிறைய எஃப்.ஆர்.பிக்கள் இருக்கின்றது. இந்த எஃப்.ஆர்.பிக்கள் அமைந்துள்ள சூழல்களையும் விண்மீன் திரள்களையும் கண்டுபிடிக்க முடியும்.

இதற்காக நாம் வேறுபட்ட தொலைகளை நோக்கிகளையும் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

வானியலாளர்கள் சில சமிக்ஞைகளை மீண்டும் கற்றுக்கொள்வதன் மூலம் FRB களைப் பற்றிய புரிதலை சற்று விரிவுபடுத்தியுள்ளனர்.

சில விஞ்ஞானிகள் இது பற்றி கூறுகையில், இது நியூட்ரான் மண்டலத்தில் இருந்து வரும் சிக்னலாகவும் இருக்கலாம் என கூறியுள்ளனர்.

மற்றொரு சில ஏலியன் ஆராய்ச்சியாளர்கள் இது கண்டிப்பாக ஏலியன்களிடம் இருந்து வரும் சிக்னல் தான் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்