கனடாவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையான இளைஞரின் பெயர் மற்றும் புகைப்படம் வெளியானது

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் ஞாயிறு அன்று துப்பாக்கி குண்டு காயங்களுடன் குற்றுயிராக மீட்கப்பட்ட இளைஞரின் பெயர் மற்றும் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

கனடாவின் Etobicoke பகுதியில் உள்ள வணிக வளாகம் அருகே பலத்த துப்பாக்கி குண்டு காயங்களுடன் குற்றுயிராக மீட்கப்பட்ட இளைஞர் 21 வயதான அமீர் நரேன் என தெரியவந்துள்ளது.

பிராம்ப்டன் பகுதியில் பெற்றோருடன் குடியிருக்கும் இவர் ஞாயிறு மாலை உள்ளூர் நேரப்படி சுமார் 7.30 மணி அளவில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் வாகனம் ஒன்றில் காணப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து பொலிஸ் அதிகாரி ஆண்டி சிங் தலைமையிலான குழு ஒன்று சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் குறித்த இளைஞர் பலத்த காயங்களுடன் காணப்பட்டதாகவும், ஏற்கெனவே மரணமடைந்துள்ளதாகவும் ஆண்டி சிங் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் நரேன் கத்திக்குத்து காயங்கழுடன் இருப்பதாகவே பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் ஆண்டி சிங் அதை மறுத்துள்ளதுடன், அவர் பலத்த துப்பாக்கி காயங்களுடன் குற்றுயிராக மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் மட்டும் நரேனுடன் சேர்த்து இதுவரை 51 பேர் நகரில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Etobicoke பகுதியில் உள்ள வணிக வளாகம் அருகே வரும்போது நரேன் உயிருடன் இருந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார்,

அந்த வாகனத்தில் நரேனுடன் மேலும் சிலரும் இருந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர். நரேன் குற்றுயிராக காணப்பட்ட அந்த வாகனமானது உரியமுறையில் நிறுத்தப்படவில்லை எனவும்,

அவசர அவசரமாக வாகனத்தை அங்கே நிறுத்திவிட்டு, இளைஞர் நரேனை கைவிட்டு தப்பியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

வாகனம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் வைத்து கண்டிப்பாக அந்த இளைஞர் சுடப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ள பொலிசார்,

தடயவியல் அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்வார்கள் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

நரேன் காணப்பட்ட அந்த வாகனத்தில் அவருடன் இருந்தவர்கள் பொலிசாரை உடனடியாக அணுக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டுமின்றி, குறிப்பிட்ட கருப்பு வண்ண Chevrolet Malibu வாகனம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு இந்த வழக்கு தொடர்பில் உதவ முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்