நடுவானில் கழன்று விழுந்த சக்கரம்... நடுங்கிய பயணிகளை காப்பாற்றி ஹீரோவான விமானியின் வீடியோ

Report Print Basu in கனடா

கனடாவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் மாண்ட்ரீலில் இருந்து சாகுவேனுக்கு பறக்கும் ஏர் கனடா விமானத்திலிருந்து சக்கரம் கழன்றி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

49 பயணிகள் மற்றும் மூன்று விமானக்குழு உறுப்பினர்களைக் கொண்ட டாஷ் 8-300 விமானம், மாண்ட்ரீல்-ட்ரூடோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சக்கரம் கழன்று விழுந்த பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ந்து பறந்த விமானி, பின்னர் வெற்றிகரமாக ட்ரூடோ விமான நிலையத்திலே விமானத்தை தரையிறக்கினர்.

இதுபோன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்க எங்கள் விமானிகள் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர், மேலும் எங்கள் நிலையான நடைமுறைகளுக்கு ஏற்ப செயல்பட்டுள்ளனர் என்று ஏர் கனடா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரும் காயமடையவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக அவசர வாகனங்கள் அழைக்கப்பட்டன.

மாண்ட்ரீல் பராமரிப்பு ஊழியர்கள், விமானத்தில் விரிவான ஆய்வை மேற்கொண்டு பிரசினையின் காரணத்தை கண்டறிந்து மற்றும் தேவையான பழுதுபார்ப்புகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மற்றொரு விமானம், மற்றொரு குழுவினருடன், பயணிகள் திட்டமிட்டபடி, சாகுனேயில் உள்ள பாகோட்வில் விமான நிலையத்திற்கு புறப்பட்டனர் என விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்