கனடாவில் இருந்து நாடு கடத்தப்படும் சீனாவை சேர்ந்தவர்... என்ன காரணம்? வெளியான தகவல்

Report Print Santhan in கனடா

கனடாவில் இருக்கும் சீன நாட்டை சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை காரணம் காட்டி, நாடு கடத்தப்பட வேண்டாம் என்று கூறிய நிலையில், அது தோல்வியில் முடிந்துள்ளது.

சீனாவின் வுஹான் மற்றும் ஹுபே மாகாணங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் இந்த இரு மாகாணங்களில் இருந்து வெளியேறும் மக்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து சீனாவின் மற்ற பகுதிகளில் கொரோனாவின் பாதிப்பு அந்தளவிற்கு இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கனடாவிற்கு கடந்த 2004-ஆம் ஆண்டு சீனாவை சேர்ந்த Ruepang Cao என்ற 36 வயது நபர் தஞ்சம் கோரி சென்றிருக்கிறார்.

தற்போது டொராண்டில் வசித்து வரும் இவரின் புகலிட கோரிக்கை, கனடாவில் நிராகரிக்கப்பட்டதால், விரைவில் நாடுகடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர் சீனாவில் தற்போது மக்களை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை காரணம் காட்டி, நாடுகடத்தப்படுவதை தடுக்க முயன்று வருகிறார்.

கனேடிய சட்டத்தின் படி, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பப்பட்ட ஒருவருக்கு குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிக்கும் அபாயம் இருப்பதாக நீதிமன்றம் கண்டறிந்தால் நாடுகடத்தப்படுவதைத் தடுக்க முடியும்.

கனடா ஏற்கனவே சீன நகரமான வுஹான் மற்றும் சுற்றியுள்ள ஹுபே மாகாணத்திற்கு நாடுகடத்தப்படுவதை நிறுத்தியது . ஆனால் சினாவின் பிற பகுதிகளுக்கு இது இல்லை.

Ruepang Cao குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்தவர், அங்கு நோய் தொற்றுக்கான எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று கனட வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட, இதை நீதிபதி ஒப்புக் கொண்டார்.

இதன் காரணமாக, இது போன்ற சான்றுகள், சீனாவின் பல பகுதிகளில் தொற்று மற்றும் இறப்பு விகிதங்கள் குறைவாக இருப்பதைக் காட்டுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளதால், அவரின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

மேலும் Ruepang Cao, தனியுரிமைச் சட்டங்களை மேற்கோளிட்டு, திட்டமிடப்பட்டபடி நாடு கடத்தப்பட்டாரா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்