கனடாவின் ரொறன்ரோவில் காணாமல் போய் 5 மாதங்கள் ஆகியும் கண்டுபிடிக்கப்படாத இளம்பெண்! வெளியான புகைப்படம்

Report Print Raju Raju in கனடா
150Shares

கனடாவில் கிட்டத்தட்ட 5 மாதங்களாக காணாமல் போயுள்ள இளம்பெண்ணின் நிலை என்னவென்றே இன்னும் தெரியவில்லை.

ரொறன்ரோ பொலிசார் இது தொடர்பிலான தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி Hailey Benedict என்ற 28 வயதான இளம்பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி காணாமல் போனார்.

அவர் கடைசியாக Dundas and Bathurst பகுதியில் காணப்பட்ட நிலையில் பின்பு மாயமானார்.

காணாமல் போன Hailey 5 அடி 6 அங்குலம் உயரம் கொண்டவராகவும், ஒல்லியான உடல்வாகு கொண்டவராகவும் இருப்பார்.

அவர் மாயமாகி கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆவதால் அவரின் பாதுகாப்பு குறித்து பொலிசாருக்கு கவலை ஏற்பட்டிருக்கிறது.

Hailey குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்